ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காதல் கடிகாரங்கள்

Amazon.com: Creative Love Gift Wall Clock Free Combination Of ...


காதல் கடிகாரங்கள்

கைக் கடிகாரத்தை உற்று நோக்கினால் இப்போது தான் எதோ காலம் நகர்வது போன்ற பிரமை என்னுள் எழுகிறது

ஒரு நொடி அடுத்த நொடியை கடப்பதற்குள் இந்த பிரபஞ்சத்தில் பல காதல் கடிகாரங்கள் மெதுவாய் நடக்க பழகியிருக்கும். இந்த இடைவெளியில் நமது சிறகுகள் விரிந்திருக்கும்.
நம்மை பார்த்த ஏகாந்த மயக்கத்தில் காலம் நகர்வதை மறந்திருக்கும். இனி கடிகார முள்களின் சத்தம் கேட்காமல் நம் முத்தச் சத்தம் ஓயாமல் ஒலிக்கும்

பேராயுதம்

Cybercriminals face the sword of justice with new London court


பேராயுதம்

நான் கொண்ட மார்பும் யோனியும் தான் உன்னை தீண்டயது என்றால் இன்று முதல் அவற்றை தீண்டத்தகாத ஒன்றாக அறிவிக்கிறேன்
சுற்றமும் நட்பும் சூழும் என்று தானே உயிரோடு நடமாடினேன், ஆனால் என் உடம்பை சூறையாடுவீர்கள் என்பதை அறிகிலேன்
இனி பெண் என்று பிறப்பேனேயானால் வெறும் ஊண் தாங்கிய பிண்டமாகவே பிறப்பேன். இனியாவது இந்த காமம் அழியட்டும்

காமமே நீயும் ஆணுக்கு அடிமையாகி விட்டாயா?
இல்லை உன்னையும் ஆடையின்றி நடமாட வைத்தார்களா?
பரவாயில்லை விட்டுவிடு?
இவர்கள் தாயின் தாய்ப்பாலை கூட காமபானமாக பருகிய இழுக்குற்றோன்கள்
இனி ஆடைகள் எனக்கு தேவையில்லை, ஏனென்றால் நான் உடுத்தியிருந்தாலும் அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை
உடைகள் மறைக்கத் தான் செய்தார்கள் என்று இன்று வரை நினைத்திருந்தேன்
ஆனால் இது தவறு, பெண்களின் உடல் வெளிச்சம் போட்டு காட்டவே நெய்தார்கள் போல
நான் போகும் வழியெங்கும் தீக்குச்சியாக ஒளிரும்கண் என்று நினைத்தேன் ஆனால் என் ஆடைகளை எரிக்கத் தான் கொண்டுவந்தாய் என்பதை மறந்துவிட்டேன்
மன்னியுங்கள்
நம்பிக்கை வைத்தது தவறு தான்
கற்பகிறகத்தில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள்
காரணம் தெரியவில்லை, ஆனால் இன்று தெரிந்து கொண்டேன்
பாவம் கடவுளும் கற்பழிப்பு செய்யப்படுகிறாள், ஆதனால் தான் பெண்களை பாதுகாப்பு செய்ய வரவேண்டாம் என்று நினைத்தாளாம்
பாவம் அவளுக்கு தெரியவில்லை புறத்தில் கூட காமமே என்று
நான் தெரியாமல் கேட்கிறேன்
பெண் என்றாலே காமம் என்பது விதியா?
இன்னும் எத்தனை ஆசிஃபாக்களையும் நிர்பயாக்களையும் நான் பலிகொடுப்பேன்
பிஞ்சு முதல் பேதை வரை உடல் என்பது காமம் என்று தானே நினைக்கிறீர்கள்
அறிவீர்களா என் அடிவயிறு வலியின் ஆழத்தை?
வாழ்ந்து கொண்டே சாகவும் செத்துக் கொண்டே வாழவும் முடியுமானால் மாதவிடாய் பழகிப்பார்
புல்லறுக்கும் கலன் ஒன்று உயிர் அறுக்க துடிக்கும் துன்பம் சுகித்ததுண்டா?
இதற்கிடையில் உங்கள் காமம் களிப்புறுமா?

பெண் என்ற பேராயுதம் ஆண்களை களைய முற்பட்டால் இனி புவியில் புற்கள் கூட மிஞ்சாது
பாவம் அன்பு என்பது மட்டுமே அவளின் ஆணிவேரானதால் துன்பத்தை தர இயலவில்லை
ஏனென்றால் இவள் தாய்மையின் படைப்பள்ளவா!

😢

உடைந்து போவதற்கு முன்

உடைந்து போவதற்கு முன்

இன்னும் எத்தனை இரவுகளை விழுங்கிவிட போகிறதோ உந்தன் நினைவுகள்

என் இரவுகள் நான் இல்லாமல் நகர்கின்றன. தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல அதை நான் எட்டி எட்டிப் பார்க்கிறேன். புகைத்துக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணெய் ஊற்றுவது போல வந்து போகின்றன மௌனமான வலிகள்.
தனிமையில் போராடுகிறேன். என்னை இழப்பேனோ இல்லை உன்னை மறப்பேனோ. எதுவானாலும் அதில் நான் உடைந்து போவது நிச்சயம்!
🙁
உடைந்து போவதற்கு முன் நான்

இச்சை தீயில் இதயம்

Astrology Aug 14th 2019. Fire of Love | by Louise Edington ...


இச்சை தீயில் இதயம்

ஐந்தடுக்கில் அறுசுவை விருந்திருந்தும் உன் எச்சில் அமிர்தம் அருந்துவதற்கு நோன்பு கொண்ட நாவிற்கு என்ன தர போகிறாய்?

கட்டிலில் விழுந்து கலவியில் ஊர்ந்து காலையில் எழுவது தான் காமம் என்றால், இடைவெளியில் கிடக்கும் ஆசை தீக்குச்சிகளை வெப்பமூட்டுவது எப்போது? இருவிரல் இறுக்கத்தில் காற்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறது.
இச்சை தீயில் இதயம் உறைகிறது. இதழ் மீது இன்னொரு சஹாரா படர்கிறது. ஏனோ மனக்கலவரம் பித்தத்தைக் கூட்டுகிறது. நரம்புகளின் வரம்புகள் விரிவடைகிறது. இரத்த நாளங்களில் அழுத்தம் கூடுகிறது. இடையிடுக்கில் எரிமலை கொதிக்கிறது. இன்னும் தாமதம் ஏனோ!
காமம் நோயா?
கலவு மருந்தா?
காரணம் நீயா!

புன்னகைப்பூ

World Smile Day aims at spreading random acts of kindness ...


புன்னகைப்பூ

என்றோ ஒருநாள் எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம் இன்று காதல் வண்ணங்கள் நிரம்பிய ஓவியமாய் நிறைந்துள்ளது.

உன் வெட்கத்திமிரில் வெதவெத்துப்போன என் வியர்வைகள் இன்று பயிர்களாய் வளர்ந்துள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு ஒரேயொரு ஆசை.
வானம் சிவக்க வெற்றிலை போடும் உன் செவ்வாய்க்கு சுண்ணாம்பு போடும் விரலாய் நான் இருந்திட வேண்டும். உன்னை சுமக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்க வேண்டும்.
நாம் வாழ்ந்த வாழ்க்கையை, கம்பன் பாட வேண்டும். காதம்பரி ராகத்தின் இடைவெளியில் நம் காதல் சேர வேண்டும். வாழ்க்கையை வாழ்ந்த பூரிப்பில் பரலோகம் போக வேண்டும்.

தனிமையில் நடக்கையில்

Nube de polvo del Sahara que cubre el Caribe no se habia visto en ...

தனிமையில் நடக்கையில்

எது எனக்கு இன்பம் நல்கும்? நீ இருக்கின்றாய்! என்பதொன்றே.
நான் தனிமையில் நடக்கையில், என்னோடு கைகோர்த்து கூட வரும் விரல்களை தேடுகிறேன்.
என் உடலின் மாற்றங்கள் ஒலிபரப்பு செய்தாலும், உணர்வின் வக்ரங்கள் விளம்பரம் செய்தாலும், என் அன்பையும் அதன் ஸ்பரிசத்தையும் நீ உணர்ந்திட முடியுமானால், உன்னை நான் காதலாக ஏற்றுக் கொள்வது பாக்கியம்.
இமை விலகும் இடைவெளியில் உன் முகம் தெரியுமானால் இமைக்கா நொடிகளில் உன்னை நான் எனக்குள் கடத்தியிருப்பேன். என்னை ஏற்றுக்கொள்வாயா?
இந்த சமூக பார்வையில் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே!
அணைத்துப் படுத்து அழுத்திப் பிடித்து உழுது முடித்து இன்னொரு உடலை வெளியேற்றும் காமக் கடும்புனல் கூடத்தின் இயல்பே, காதல் தன்மையை கண்டதில்லை?
அவர்கள் பார்வையில் உரலும் உலக்கையும் தான். காமம் நோயாக இருக்குமானால் நாம் நம்மை தேடுவதற்கு அவசியமில்லை. நாம் காமம் கடந்த காதல். கலவு கடந்த மோதல்.
இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இனியாவது நம்மை தேடுவதற்கு வாழ்க்கை செய்வோம் வா!
வயதான காலத்தில், மூக்குக் கண்ணாடியின் வழியே உன்னை எதிர்நோக்கும் விழிகளை நான் கொள்ள வேண்டும்.
நான் இன்னமும் இருக்கிறேன் என நீயும், நீ எனக்காகவே இருக்கிறாய் என நானும் வாழும் வாழ்க்கை அர்த்தமாகும்!
இனி, நாம் யார் என்பதை நாமே முடிவு செய்வோம். புதியதோர் உலகம் செய்வோம் வா!
ஸ்ரீ ஆகிய நான் உன்னை ஏற்க விரும்புகிறேன். விருப்பங்கள் விடைபெறும் நேரம்! ( காத்திருக்கும் நாட்குறிப்பில் என்னைக் கடந்த சில கவிதைகளில் நான்)
- அன்புடன்

நவீன சஹாரா

The Sahara: Earth's Largest Hot Desert | Live Science


நவீன சஹாரா


பாடத்திட்டத்தின் முதல் பக்கத்தில் பதிந்த அறம், படித்தவர்கள் மனதில் படிந்திருந்தால் இத்தனை உயிர்கள் இங்கே துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உப்பில் தொடங்கி உடை வரை அத்தனைக்கும் இங்கே வரிகள் வரிசையில் நிற்கின்றன. இத்தனை வரிகள் வரிசையில் இருந்தும் நமது தேவைகள் தீர்ந்தபாடில்லை.
உடன்கட்டை ஏறிய காலத்தில் நடந்த கொடுமைகள், இப்போது நவீனத்துவம் அடைந்திருக்கிறது. இன்றும் கூட ஒத்தையடி பாதையில் ஒரு கூட்டம் விதி செய்கிறது. பாதையில் பள்ளம் மேடுகள் இருக்கலாம். ஆனால் பாதையே இல்லாமல் இருப்பது நமது தவறு.
எங்கே அதிகாரம் ஆள்கிறதோ அங்கே அடக்குமுறைக்கு எதிராக வன்முறைகள் நியாயமாகிறது. இன்னொரு நவீன சஹாரா தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது.

வெறுமை

Understanding emptiness - in 50 words or less - Lion's Roar


வெறுமையை சுகித்ததுண்டா?

நீ என்னை தழுவிய சிறுபொழுதுகளை எண்ணி எண்ணி ஓடும் எண்ண ஓடத்தில் நான் மட்டும் மூழ்கி தத்தளிக்கும் ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் இருக்கும்.

நீ அமர்ந்த நாற்காலி என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. கிணத்தடியில் துருப்பிடித்த குவளை வைரமாய் மின்னுகிறது. நான் வாசல் தாண்டுகையில் "சீக்கிரம் வந்துடுங்க" எனும் மழலை குரல் அசரீரியாகிறது. துக்கம் தாளாமல் தூக்கிலிட கயிறெடுத்தால், மனம் இறந்ததை உடல் உணர்த்துகிறது. நீ இல்லாத வாழ்க்கையில் நான் எதற்கு?

தனிமையில் யுத்தம் செய்ததுண்டா

How loneliness affects physical and mental health - Insider

தனிமையில் யுத்தம் செய்ததுண்டா

நீயும் நானும் அளவலாவிய அத்தனை பெரும்பொழுதுகளும் ஏதோ பேருந்துப் பயணம் போல நகர்ந்தது. இடையிடையே வரும் நிறுத்தங்கள் போல அன்பும் கோபமும் நெருக்கத்தை கூட்டியது.
முதல் முறையாக உன்னை நான் பார்த்ததைப் போல குறைந்த இடைவெளிகள் நினைவுறுத்தியது. ஏனோ, நான் இறங்குவதற்கு முன் நீ என்னை கடந்து சென்றுவிட்டாய்!
இதோ என்னோடு நீயும் உன்னோடு நானும் சேர்ந்த பயணங்களை தேடுகிறேன் தனிமையை எதிர்த்து.
😐

நான் இல்லாமல் போகிறேன்

A Mysterious Flute Sound

நான் இல்லாமல் போகிறேன்

நீ ஊதும் அப்புல்லாங்குழலைப் போல நான் இல்லையே!

உன்னை நோக்கி நகரும் என் நாட்குறிப்பில் நான் இல்லாமல் போகிறேன். உந்தன் நினைவுகளை சுகித்து சுகித்து எந்தன் எடையை நான் இழக்கிறேன். காதல் கிணற்றில் காமத்தை ஊற்றி வற்றாமல் உயிர்ப்பூட்டுகிறேன்.
என் காலை விடிவதும் அதன் தொடக்கம் முடிவதும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதோ வீசும் காற்றுக்கு மத்தியில் பேசாத பூக்களிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
உடலைக் கடந்த ஊடல் கொள்ள வேண்டும். தேகம் மறந்த தேடல் நீளவேண்டும். என்னில் நிறைந்த உன்னையும் உன்னில் இழந்த என்னையும் பிரபஞ்சம் காண வேண்டும்
இதோ ஓர் இரண்டாம் உலகம் உருவாகிறது

தீராத நோய்

How To Restore Sexual Intimacy in Your Relationship | GrowingSelf.com

தீராத நோய்

வெயிலில் உருகும் வெண்ணெயை உண்ணவும் முடியாமல் அதை பத்திரமாக எடுத்து வைக்கவும் முடியாமல் தவிக்கும் வேதியல் மனமாற்றத்தை உரைத்திட முடியுமோ?

என்ன நோய் இது? மருந்தே நோயாகிறது. நோயே மருந்தாகிறது. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இது ஏற்படுமோ? கல்லாய் விரைக்கும் கலவியில் காதல் நீர்க்குமோ? விளங்க முடியாத விவரங்களுக்கு விளக்கவுரை ஏற்ப்புடையதா?
தீரா நோயை தீர்த்துக் கொண்டால் தீர்த்திட முடியாத நோயை மீண்டும் கூட்டுகிறது இது. அடக் காமமே உனக்குள் காமம் வராதோ? நீயும் என்போல் புலம்ப மாட்டாயோ?

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...