ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

என்மை

Image may contain: tree, outdoor and nature

கரடு முரடான காடுகளில் நான் பயணிக்கிறேன்.என்னை அதிகம் நேசிக்கும் முட்களுக்கு உதிரத்தை பரிசளிக்கிறேன். புதையும் கால்களோடு சேர்ந்து நானும் அமிழ்கிறேன்.

இரக்கமில்லா இரவுகளில் நான் காணாமல் போகிறேன். இதயமற்ற மனிதர்களை இறையன்போடு நேசிக்கிறேன்.
இன்றும் நான் தீர்ந்து போகிறேன்.
மீண்டும் முயற்சிக்கிறேன்.
மீண்டு மீண்டும் போராடுகிறேன்.
எதன் மீதோ நம்பிக்கை கூட்டுகிறேன்.
என்னை என் முன் நிறுத்தி வலியை ஏற்றுகிறேன்.
எனக்கான இடத்தை யாருக்காகவும் தர மறுக்கிறேன்.
கடிகாரம் உடைக்கிறேன்
காலத்தை மறக்கிறேன்
கனவுகளோடு காதல் கொள்கிறேன்.
கவிதை கிறுக்குகிறேன்
கடல்மணலில் காலூன்றுகிறேன்
கதகதக்கும் காற்றுக்கு கதை சொல்கிறேன்.
ஒன்றை மட்டும் மறக்காமலும் தொடர்கிறேன்.
வலிமை குறைந்திருந்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறேன்!
நான் நானாக இருக்கிறேன். அதனாலேயே நான் உயிருடன் நடமாடுகிறேன்.
நான் என்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...