திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மதங்கள்

Religion in crisis


மதங்கள்

தேவை அளிப்பை நோக்கியது

ஆசைகளை உள்ளடக்கியது

ஆசைகள் திணறல்களின் தெளிவு 

தெளிவோ தீர்க்கமான சிந்தனை

சிந்தனையோ வாக்கின் இனிமை

வாக்கோ வளத்தின் அடையாளம்

அடையாளம் மனதின் எழுகை
எழுகை தூண்டுதலின் தொடக்கம்
இந்த தொடக்கம் தான் அடிப்படை
அடிப்படையே திரிந்த தேவையாக இருக்கிறது

அப்படியென்றால் எதுவும் இங்கு தனித்து இயங்கவில்லை. இது ஒ‌ட்டுமொ‌த்த கூட்டுமுயற்சி

முறன்களின் தொகுப்பாக இந்த இயற்கையே இருக்கையில் நடைமுறை முறன்கள் இயல்புதான்
இதை மறுக்கமுடியுமா? இன்று ஏதோ ஒரு வெற்றிடம் நம்மை சூழ்ந்து அதற்கான விலையாக நம்முடைய நேரத்தை கொடுக்கிறோமே அது தான் முறன்களாக மாறுகிறது

அடிப்படைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாத அனுகுமுறை தான் அவசரமாக அநீதியை ஆங்காங்கே நிகழ்த்துகிறது

ஏன்? நாம் புத்தனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச மனிதத்தன்மையை வெளிப்படுத்த பயம் கொள்கிறோமே! எதற்காக?

சித்தாந்தங்கள் வாசித்த நம்முடைய மனுகுலம் மனித உரிமைகளை அடக்கி ஆளுகையில், அந்த சட்டத்தை உடைப்பதில் என்ன தவறு? முகத்திரையில் ஒளிந்து கொண்டு முற்போக்கு சிந்தனை என்கிற பெயரில் பழைய அனுகுமுறையை பிற்போக்காக கருத்தியல் ரீதியாக திணிப்பது எவ்வளவு பெரிய வஞ்ச மனப்பான்மை

இங்கு குற்றங்கள் பிறக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகின்றன

இந்த சமூகத்தில் பெரும்பாலான உரிமைகள் வேண்டுமென்றே ஆழமாக புதைக்கப்படுகிறது

அதற்கு பின்னால் உள்ள அத்தனை பேரின் முகங்களின் உண்மையை அலசுவீர்களேயானால் அவர்கள் மத உணர்வோடு அலையும் வெறியர்கள்

மதங்கள் தவறுகளை ஒருபோதும் செய்வதில்லை
இந்த மதங்களை நிர்வகிக்கும் மத தலைவர்கள் மட்டுமே!

சமூக சிக்கல்கள்

Capturing Voice of Customer (VOC) – Business Audit Compliance


சமூக சிக்கல்கள்

எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்


உண்மையில் அது ஆபத்து அல்ல. அசிங்கமும் அல்ல. அறியாமை கூட இல்ல. அதை அறிய முற்படாத எண்ணம் மட்டுமே

கையெழுத்து மறைக்கப்படவில்லை மாறாக மறுக்கப்பட்டது. இது தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கலந்தோடும் கலாசாரம்

அவரவர் தேவை என்ன என்பதை கூட்டம் போட்டு கட்டமைத்து அடுக்குமாடிகளாக சமூக தேவைகளை முறன்களாக மாற்றியுள்ளோம். 
விளைவுகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு தள்ளிவிட்டு அதன் பயனாளியாக மட்டும் வாழ நினைக்கிறோம்

கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
உங்கள் ஓட்டமும் அதற்கான நாட்டமும் உங்களுக்கு பொருந்தாதது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
மாற்றப்பட வேண்டியது சமூக சிக்கல்கள் இல்லை
சிக்கல்கள் உருவாக காரணமாக இருக்கும் வாய்ப்புகள் மட்டுமே

திருமணம்

Men want to marry younger women. Don't believe it if you are told ...


திருமணம்

திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!


என்று சந்தேகம் எழுந்ததோ அன்றே தாலி என்கிற முறைமை தேவைப்பட்டது. அகக் கோட்பாட்டின் சீர்கேடு திருமணம் என்கிற பெயரில் வந்ததாக கருதுவதில் தவறில்லை

நீதி காப்பியம் தோன்றியதற்கு கன்னகி காரணமாகவும் இருக்கலாம். ஆனால் கோவலனை சீர்செய்ய தவறிய பொறுப்பு கன்னகியைச் சேரும். அவள் தேரா மன்னா என்றதற்கு பதில் தோற்றா ஒழுக்கா என்று கோவலனை கேட்டிருந்தால் அவளின் வாழ்வு இன்புற்றிருக்கும்

இந்த தவறு சமூகத்தை சார்ந்த அறநெறி கொள்கைகளின் முறையின்மையின் வெளிப்பாடு

எல்லை நீத்த பிரபஞ்சத்தை ஒரே ஒரு சொல்லில் சுட முடிந்த சீதை ராமனுக்கு காத்திருக்க வேண்டியதன் அவசியம் அறிவேன். ஆனால் ராமனின் தவறுகள் வேடிக்கையாக பார்க்கப்படுவதும் ராவணனின் செயல் தூற்றப்படுவதும் சமூகத்தை ஒரு முறையாவது கேள்வி கேட்க தோன்றுகிறது

வாழ்வியல் பந்தங்களில் சார்பு நிலை சரியில்லாமல் போனதற்கு சீதையின் தவறு ஒரு மகச்சான்று

தொல்காப்பியம் கூட புறத்தை இருகூறுகள் கொண்டே சாடியதன் அர்த்தம் அகத்திற்கு கொடுத்த முன்னுரிமையை வெளிக்கொனர்கிறது

தன்னை இழந்த அகதி தன் உடையை இழக்க தகுதி வாய்ந்தவன் இல்லை, இருப்பினும் பந்தயப் பொருளாக த்ரௌபதியை வைத்தது உரிமை மீறல் தானே

அறம் வளர்த்த சபையில் தர்மம் ஸ்தாபிக்காமல் போனதற்கு திருமண பந்தங்கள் ஒழுங்காக வரையறை செய்யாமல் போனதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறதே

சபை மௌனத்தை ஆதரித்தது சத்திய வாக்குரைக்கும் உத்தமனின் வேதியரை நிற்கவைத்து கேள்வி அம்புகளை தொடுத்தது போல இருந்திருக்கும்.

புராணங்களை மத உணர்வோடு அனுகாமல் உளவியல் ரீதியாக அனுகுவது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் நமக்கு நாமே புரிதலை ஏற்படுத்த காலத்தால் வடிவெடுத்த  வாசகங்கள்.

ஓடமும் ஒரு நாள் ஓடையில் ஓடும்
ஓடையும் ஒரு நாள் ஓடத்தில் ஓடும்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப

என்னைத் தீண்டு

Related image

என்னைத் தீண்டு

எதிர்பாராத இடத்தில் என்னைத் தீண்டு
எவ்வளவு இயலுமோ அவ்வளவு தழுவு
தீவீரத்தால் என்னை திணறச்செய்
வெப்பத்திற்கும் வேகத்திற்கும் கடமையாற்று

உடலுக்கும் உடமைக்கும் பரிவுயில்லை என்பதை முழுதாக்கு
என் முந்தானை மோகத்தை வெளியேற்று

நான் கொண்ட கள்வனே

தொடர்பற்ற நேரம்

Blocked My Number | How many times does the phone ring when ...


தொடர்பற்ற நேரம்

தொடுதிரையை திறந்து தினமும் திகைத்து போகிறேன்.

நீ இயங்கலையில் இல்லாததால் இதயம் நோகிறேன். குறுஞ்செய்தி கொண்டென் உள்ளம் கொய்வாயா.?
இல்லை குறட்பதிவின் வாயிலாக கொஞ்சி செல்வாயா.? கைப்பேசியில் உரையாட நாவும் துடிக்க
காரணமே இல்லாது நாணம் தடுக்க
முகநூலும் பகிரியும் என் தோழியாகி
முயல்கிறதே பசலை தீர்க்க யாதுமாகி

தொடர்பற்றதாய் உணர்கின்ற நேரம் யாவும்
தொடர்கிறது கற்பனையாய் நம் காதற்கோலம்.
அலைக்கற்றையின் சைகைகள் நமைபிரிக்க
அடுக்குமோ என் தலைவா
நம் அன்பை அடைக்க.

கவனமாக இரு


கவனமாக இரு

பெண்ணே!!

கழிப்பறையில்
கவனம்...!
குளியறையில்
கவனம்...!
படுக்கையறையில்
கவனம்...!
பள்ளியறையில்
கவனம்...!
அலுவலகறையில்
கவனம்...!
கோவில் கருவறையில்
கவனம்...!
பேருந்து பயணத்தில்
கவனம்...!
இரயில் பயணத்தில்
கவனம்...!
பாலூட்டும் அறையில்
கவனம்...!
மருத்துவறையிலும்
கவனம்...!
ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!
நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,
பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?
சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?
பெண்ணின் கவனத்திற்கான
பதிவு இல்லை...!

ஒரு ஆணாக இருப்பதின்
அவமானத்திற்க்கான பதிவு...!

நீ என்னை நினைக்கவில்லை

The bus ride | Nomadic Sahil


நீ என்னை நினைக்கவில்லை

பயணங்களின் இடையில் கிசுகிசுவென பசிக்கும் அவளின் நினைவுகளுக்கு, பசியார என் வார்த்தைகளை உணவாக்கிக்கொள்கிறாள். ஆசைதீர என் வார்த்தைகளோடு சேர்த்து என்னையும் தின்றாள்... ஆனால் ஏனோ இடைவெளியை விட மறுத்துவிட்டாள்... 

இடையிடையே சினுங்கிய அவளின் உடையை படையெடுக்க ஏகாந்த எண்ணம் எனக்கில்லை ... அதனால் எழுந்த எண்ணத்தை உதறவும் மனமில்லை...

உன் கொடியிடையில் விழுந்த நான் விருந்துன்ன முந்தியை பந்தியாக்கு... ஆனால் நான் மட்டுமே நீ விருந்தளிப்பதை பார்க்க தரவேண்டும் நல்வாக்கு...

உன் கண்களை நான் அருகே இருந்தபோது கண்டதில்லை விழியீர்ப்பினால் சிதைந்த இடம் என் இதயமாக மட்டுமே இருக்கும் என்று.

ஆனால்

உன் சுந்தர விழியை காணமல் வாடி வதைபடும் என் ஊமை கண்களுக்கு எப்படி சொல்வேன் நீ என்னை நினைக்கவில்லை??? என்று

எழுதிய மை காய்வதற்குள் என்னை கட்டி அனைக்க வா என் விழியே...

உதிர்த்து விட்டு போ!

10 Make-up Tips for Girls with Eyeglasses


உதிர்த்து விட்டு போ!

உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.

இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக 

காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காம கடும்புனல் கூட்டமே

Malena – ICFFICFF


காம கடும்புனல் கூட்டமே

தனிமையில் உலவும் பொழுதும், ஆடையின்றி உறங்கும் பொழுதும், நடைபாதையில் அடியிடும் பொழுதும் உற்று நோக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் யாவும் நானில்லை!
உடலென்ற உலையில் எரிபொருள் நான். பிறந்த சர்ச்சைகளின் இறப்பு நான். சுதந்திர நாட்டின் அடிமை நான். என் உடலில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் இத்தனை கொடூரங்களை ஏற்படுத்த முடியுமோ?
நான் உடலால் விற்பனைக்கு உங்கள் பார்வைக்கு. சுமத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நான் என் கண்கள் கொண்டு பார்த்தால் இந்த சமூகத்தில் நடமாடும் அத்தனையும் குருட்டு பார்வையாளர்கள் மட்டுமே
சுதந்திர பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? விரைத்த ஆண்குறியின் ஆசைகள் எல்லாம் என் யோனியின் ஆழத்தில் இறக்கப்படுவதற்கோ?
காமத்தின் கூடாரம் உங்கள் அருவருக்கத்தக்க பார்வைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நான் உடலால் விற்பனைக்கு என்றால் அதனை உற்பத்தி செய்த உங்கள் சமூக பார்வைகள் நான் விலைக்கு வாங்க தரமற்ற கேவலங்கள்
அட காம கடும்புனல் கூட்டமே!

நான் உடலால் விழுங்கப்படுகிறேன்
- இவள் மலீனா

முதல் துளியின் சூடான முத்தம்

Drop Of Love Heart - DesiComments.com


முதல் துளியின் சூடான முத்தம்

கார்மேக மேனியில் தேன் போல ஒழுகி விழும் ஏகாந்த மழையில் முதல் துளியை தேடிப் பிடித்து மூச்சு முட்ட முத்தமிட வேண்டும்

சத்தமிடும் மணல் துகள்களின் இடையே நான் நின்று போக வேண்டும். மொத்தமாய் நான் உன்னில் கரைந்த பின்பு பிரபஞ்ச அழகும் உடைந்து போக வேண்டும்.
முதல் துளியை நான் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தாக்க வேண்டும். முடிவில் பித்தம் தெளிந்து சித்தம் துளிர நீ மீண்டும் மழையாக வேண்டும்.
மழையென நீ அதை நனைத்திட நான்.
😍

உலகின் அழகெங்கும் நான்

Stay safe and well | Save the California Delta Alliance (STCDA)

உலகின் அழகெங்கும் நான்
வலிகளும் வேதனைகளும் வாழ்க்கையை செதுக்குமாயின், வாழ்வின் பேரழகு சிலையாக நான் இருப்பேன். என்னை நீர்திடாத செயல்களுக்கு மெருகூட்டி வர்ணம் கூட்டுவேன். 🌈
என்னை வியக்க வைக்கும் சில நிபந்தனைகளுக்கு நான் மௌனமாவேன். என்னை விழுங்க நினைக்கும் பல விதிகளுக்கு நான் இரைச்சலாவேன். எனக்கான தனிமையில் உலவும் என்னில் ஓராயிரம் அர்த்தங்களோடு புதுமையான கோட்பாடுகளை நிறுவுகிறேன். அவற்றின் பழமையான கருத்துக்களை அடித்தளம் போட்டு என்னோடு சேர்ந்து நானே உயரமாகிறேன்.
ஒருவேளை, யார் வேண்டுமானாலும் யாராகவும் ஆகலாம். ஆனால் எவரும் நான் ஆக முடியாது. வினவும் வினாக்களில் விடையென ஒளிந்து கொண்டு வெளியேறும் சர்ச்சைகள் அல்ல நான். விதைகளை விதைத்து கொண்டு அடுத்தவரின் கையில் அறுவடையை ஒப்படைக்கும் சங்கமம் நான்
நான் நானில்லை. நான் நானும் இல்லை. நான் நானே இல்லை. நானற்ற நானாக நான்.

உலகின் அழகெங்கும் நான்

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...