திங்கள், 10 ஆகஸ்ட், 2020

உதிர்த்து விட்டு போ!

10 Make-up Tips for Girls with Eyeglasses


உதிர்த்து விட்டு போ!

உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.

இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக 

காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காம கடும்புனல் கூட்டமே

Malena – ICFFICFF


காம கடும்புனல் கூட்டமே

தனிமையில் உலவும் பொழுதும், ஆடையின்றி உறங்கும் பொழுதும், நடைபாதையில் அடியிடும் பொழுதும் உற்று நோக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் யாவும் நானில்லை!
உடலென்ற உலையில் எரிபொருள் நான். பிறந்த சர்ச்சைகளின் இறப்பு நான். சுதந்திர நாட்டின் அடிமை நான். என் உடலில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் இத்தனை கொடூரங்களை ஏற்படுத்த முடியுமோ?
நான் உடலால் விற்பனைக்கு உங்கள் பார்வைக்கு. சுமத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நான் என் கண்கள் கொண்டு பார்த்தால் இந்த சமூகத்தில் நடமாடும் அத்தனையும் குருட்டு பார்வையாளர்கள் மட்டுமே
சுதந்திர பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? விரைத்த ஆண்குறியின் ஆசைகள் எல்லாம் என் யோனியின் ஆழத்தில் இறக்கப்படுவதற்கோ?
காமத்தின் கூடாரம் உங்கள் அருவருக்கத்தக்க பார்வைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நான் உடலால் விற்பனைக்கு என்றால் அதனை உற்பத்தி செய்த உங்கள் சமூக பார்வைகள் நான் விலைக்கு வாங்க தரமற்ற கேவலங்கள்
அட காம கடும்புனல் கூட்டமே!

நான் உடலால் விழுங்கப்படுகிறேன்
- இவள் மலீனா

முதல் துளியின் சூடான முத்தம்

Drop Of Love Heart - DesiComments.com


முதல் துளியின் சூடான முத்தம்

கார்மேக மேனியில் தேன் போல ஒழுகி விழும் ஏகாந்த மழையில் முதல் துளியை தேடிப் பிடித்து மூச்சு முட்ட முத்தமிட வேண்டும்

சத்தமிடும் மணல் துகள்களின் இடையே நான் நின்று போக வேண்டும். மொத்தமாய் நான் உன்னில் கரைந்த பின்பு பிரபஞ்ச அழகும் உடைந்து போக வேண்டும்.
முதல் துளியை நான் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தாக்க வேண்டும். முடிவில் பித்தம் தெளிந்து சித்தம் துளிர நீ மீண்டும் மழையாக வேண்டும்.
மழையென நீ அதை நனைத்திட நான்.
😍

உலகின் அழகெங்கும் நான்

Stay safe and well | Save the California Delta Alliance (STCDA)

உலகின் அழகெங்கும் நான்
வலிகளும் வேதனைகளும் வாழ்க்கையை செதுக்குமாயின், வாழ்வின் பேரழகு சிலையாக நான் இருப்பேன். என்னை நீர்திடாத செயல்களுக்கு மெருகூட்டி வர்ணம் கூட்டுவேன். 🌈
என்னை வியக்க வைக்கும் சில நிபந்தனைகளுக்கு நான் மௌனமாவேன். என்னை விழுங்க நினைக்கும் பல விதிகளுக்கு நான் இரைச்சலாவேன். எனக்கான தனிமையில் உலவும் என்னில் ஓராயிரம் அர்த்தங்களோடு புதுமையான கோட்பாடுகளை நிறுவுகிறேன். அவற்றின் பழமையான கருத்துக்களை அடித்தளம் போட்டு என்னோடு சேர்ந்து நானே உயரமாகிறேன்.
ஒருவேளை, யார் வேண்டுமானாலும் யாராகவும் ஆகலாம். ஆனால் எவரும் நான் ஆக முடியாது. வினவும் வினாக்களில் விடையென ஒளிந்து கொண்டு வெளியேறும் சர்ச்சைகள் அல்ல நான். விதைகளை விதைத்து கொண்டு அடுத்தவரின் கையில் அறுவடையை ஒப்படைக்கும் சங்கமம் நான்
நான் நானில்லை. நான் நானும் இல்லை. நான் நானே இல்லை. நானற்ற நானாக நான்.

உலகின் அழகெங்கும் நான்

நவீன தீண்டாமை

No photo description available.


நவீன தீண்டாமை

எனக்கான தேடலை நான் கூர்ந்து கவனித்து ஆழமாக பயணித்து அதில் முதிர்ச்சி அடையும் வரை போராடி போராடி இரத்தங்களை வியர்வையாக வெளியேற்றுகையில் எனக்கு சற்றும் பொருந்தாத பெருவாரியான சுமைகளை திட்டமிட்டு திணிப்பது தான் நுழைவுத் தேர்வின் அடிப்படை நோக்கமோ?
நவீன தீண்டாமையை இந்த இளைஞர் கூட்டம் எதிர்கொள்ளும் போது என் உடலில் குருதி இல்லாமல் போயிருக்கும். வளர்ந்துவரும் கல்வியறிவு இதை மறைமுகமாக கட்டாயமாக்குவது ஏற்புடையதாக இல்லை. ஒன்றை மட்டும் ஆழமாக நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால், எத்தனை சுமைகளை திட்டமிட்டு திணித்தாலும், நாங்கள் மீண்டும் மீண்டும் முளைப்போம்.
தீண்டாமை நுழைவுத் தேர்வுகளாக வடிவம் எடுக்கிறது. அரசு அதற்கு அடித்தளம் போடுகிறது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறாமல் போவது போல், ஒருநாள் கல்வி ஏனென்று மாணவர்கள் பள்ளிகளை நோக்கி நடக்காமல் போக வாய்ப்பு உண்டு.
அரசியல் சமூக மாற்றமே ஒழிய, தனிநபர் சார்ந்த பெருமை சேர்க்கும் செயல் அல்ல. இறுதியாகவும் எச்சரிக்கை செய்கிறேன் மத்திய அரசு தமிழ்நாட்டில் பல நவீன தீண்டாமையை விதைக்கிறது.

காதல் தொலைநோக்கியில் நீ

Telescopes: Seeing Stars | Britannica


காதல் தொலைநோக்கியில் நீ

வானம் எப்படி பிரபஞ்ச ரகசியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறதோ, அதைப் போலவே நீயும் சிலவற்றை ரகசியமாகவே வைத்திருக்கிறாய். என்றேனும் ஒருநாள் என் காதல்-தொலைநோக்கியில் நீ முழு காட்சியாக மாறப்போகிறாய். என்னை நினைக்க தூண்டிய இரவுகளுக்கு உன் இரகசியங்களை விளக்கத்தான் போகிறேன்.
வேகம் கூடி நிறை இழந்து நீயாகவே நான் பயணிக்கிறேன். பயணம் முடிவதாக தெரியவில்லை. நானும் உன்னை விலகுவதாக இல்லை. இடையிடையே சில இடைவெளிகள்.

இடைவெளிக்கும் இடைவெளி இல்லை
😊

சமூக விதைகள்

No photo description available.


சமூக விதைகள்

இந்த சமூகத்தின் ஒற்றை வடத்தை எப்படியாவது இழுத்து கட்டிவிட வேண்டும் என்று எத்தனையோ விடயங்களை கடந்தாயிற்று. இதுவும் கடந்து போகும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே மறக்கவும் பழகியாயிற்று. மனதின் ஓரத்தில் ஓயாமல் முற்றுகை இடும் கவலைகளையும் சமாதானப்படுத்தி முடித்தாயிற்று.

ஒன்றை மட்டும் விட்டுவிட்டேன்! நான் அமர்ந்து பேசிப்பேசி பழகிய பெரும்பாண்மை யாவும் சிறுமை கண்டு விலகுவதை கவனிக்க மறந்தேன். சற்று அமர்ந்தேன். சிந்திக்கலானேன். மனம் மாறியது. சாடல் ஒழிந்து தேடல் தொடங்கியது.
கருப்பு வெள்ளை காகிதத்தில் கலர் கனவுகள் போல தவறாமல் வருகிறது மனதின் சஞ்சலங்கள். பிறந்த போது அழுததை விட பிறருக்காக அழுவது வழக்கமாகிவிட்டது
மற்றவர்களைப் போலவே நானும் விரலுக்கு மையிட்டு மையிட்டு காத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் சிறிய திருத்தம். நான் காத்துக் கொள்ளும் அளவிற்கு சமூக அமைப்பு இல்லை என்பதை மட்டும் நினைக்க தவறுகிறேன். பெருமை பேசிய இனம் தானே நாம். சாதிய ஒடுக்குமுறையை கையிலெடுத்த இனம் தானே நாம். பேசுவோமா?
சாலை வழியே ஹிந்தி, கல்வி வழியே ஆங்கிலம், இசை வழியே கன்னடம், கடவுள் வழியே சமஸ்கிருதம் என நம்மை நாமே தொலைத்துவிட்டு திரிகிறோமோ?.
மதமில்லா கடவுள், சாதியில்லா சமூகம் என்பதெல்லாம் வெறும் கனவாகுமோ?. போதும்! நான் மட்டுமே புலம்பி என்ன ஆக போகிறது? பிறகு ஈழம் போல புலம்பெயர்ந்து வாழ்வதற்கு ஆயத்தமாக வேண்டும். கல்தோன்றா மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி, நெஞ்சில் பாரங்களை சுமப்பது விதியின் சதியோ?

🙁

மனசாட்சி

Manasatchi - Page 06 - Page 6


மனசாட்சி

என்மேல் படியும் அத்தனை அழுக்குகளும் எங்கோ யாரோ ஆடையாக உடுத்தி கழற்றியதே. எவ்வளவு தான் நானும் தாங்குவேன்?

உங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் அத்தனை குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டியா நான்? என்னை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? நான் உங்கள் நிழலாகவே வாழ்ந்தாலும், நான் நீங்களாக முடியுமா?
உங்களால் தான் நான் உருவாக்கப்பட்டேன் என்பதற்காக என்னை அடிமையாக்க முனைவது முறைமையா? எனக்கென்று செயல்படும் தனிப்பட்ட உலகம் உங்களுக்கு பிரச்சினையா?
என்னையும் கொஞ்சம் சுதந்திரத்தை அனுபவிக்க விடு. நீங்கள் வகுத்த முரண்பாடுகள் என்னை உலுக்கவில்லை, எந்த முரண்பாடுகளையும் நான் தாங்கிடுவேன் என எனது விடுதலையை கைது செய்யும் போது தான், உங்கள் வக்கிரத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய ஆயத்தமாகிறேன்
-இப்படிக்கு #மனசாட்சி

வழியெங்கும் புத்தகங்கள்

When Was the Bible Written? Complete History of Old and New Testament


வழியெங்கும் புத்தகங்கள்

வழிபாடுகள் ஆக்ரோஷமாக ஓடுகையில் வழிப்போக்கன் நடந்து போகிறான். நடைபாதை வழியெங்கும் புத்தகங்கள்!

வழிபாட்டை நிறுத்திவிட்டு புத்தகம் வாசித்துவிட, தொழுகையை கைவிட்டு பின்னோக்கி நடக்கலானான் (படித்த புத்தகம்: கடவுளை அடையும் எளிய வழி)
முயற்சி விடைபெறுகிறது! மூடநம்பிக்கை வீரியத்தை கூட்டுகிறது!
🤷🏻‍♂

வெளிச்சமெங்கும் உன் முகம்

Image may contain: 1 person, sitting and outdoor


வெளிச்சமெங்கும் உன் முகம்

ஒரு எஜமானியின் மனப் புத்தகத்திலிருந்த ஒருபக்கம்

வெளிப்படுத்திடவே முடியாமல் இந்த குறுநகையை இத்தனை நாளாய் மறைத்து வைத்திருந்தாயோ!
அதெப்படி, கறைபடிந்த முகத்திற்கு பின்னால் குறையாத இளநகையை தவணையில் செலுத்துகிறாய்!
ஓயாமல் தேயும் பாத்திரங்களில் உன் புன்னகையை இறக்கிவைத்துவிட்டாயா! இல்லை சலவை இயந்திரத்தில் விழுந்த துணிகளைப் போல அதையும் சேர்த்து வெளியேற்றிவிட்டாயா!
நீதானா!
எத்தனை பேர் சத்தம் போட்டாலும் அத்தனை பேருக்கும் பதிலளிக்கும் திறமையை நான் உன்னிடம் கற்றுக் கொள்கிறேன்
ஓய்வின்றி உழைக்கும் நீ ஓய்வூதியம் கேட்காததை எண்ணி உள்ளம் குளிருகிறேன்
மிச்ச மீதியில் கூட இன்பங்களை அனுபவிக்க முடியும் என்று மறுக்காமல் பழகுகிறேன்
இதற்கெல்லாம் காரணம் நீயே!
தூரத்தில் இருக்கும் தாயை நேரில் காட்டும் உனக்கு வருடத்தின் ஒரு நாள்தான் மகிழ்ச்சி என்று தீபாவளி ஆணையிட்டிருந்தால், உன் குறுநகை கண்டு தடைஉத்தரவு பிறப்பிக்கட்டும்
நான் எஜமானி நீ வேலைக்காரி என்பது சமூக சிக்கல்களில் ஒன்றாகளாம். ஆனால் நீ என்றும் என் தாய்க்கு நிகரானவர் தான் (லட்சுமி)
போ! இந்த சேலையால் தீபாவளியின் வெளிச்சமெங்கும் உன் முகம் மிளிரட்டும்!

காலை காஃபி

Drinking coffee before bed does not affect sleep quality, study ...


காலை காஃபி

அடர்த்தியான காரிருள் மெல்ல மெல்ல ஒளிபரவிய இடத்தை ஆட்கொள்ளும் போது, எங்கோ புதைக்கப்பட்ட கோபமும் வக்ரமும் இழப்பும் ஏமாற்றமும் சுதந்திரத்தை வரவேற்கும்

இத்தனை கொடூரங்களை தன்னிடத்தே அடைத்து வைத்து விட்டு எதையுமே அறியாத குழந்தை போல தவழும் சிரிப்பில் சில நிபந்தனைகளையும் நம்மிடம் முன்வைக்கிறது.
இதில் முரண்பாடுகள் இல்லை! முரண்களின் தாகம் இதுவாக இருக்கலாம்.
விதிமுறை எதிரொலி செய்தால் எச்சரிக்கை என்ன வேடிக்கையா பார்க்கும். உச்சரிப்புகள் கூட கட்டளை ஆக நச்சரித்து போகும் மிச்சமாகும் சச்சரவுகள்.
பரவாயில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அவ்விருள் நம்ம முழுமையாக முழுங்கியிருக்கும்.
கட்டமைப்பு எல்லாம் தகவமைத்துக் கொண்ட நச்சுக்களின் கூட்டமா? ஒருவேளை நச்சுகள் தான் கட்டமைப்பின் அடிப்படையா?
காலை காஃபி முதல் இரவு தூக்கம் வரை எல்லைப்படுத்திய பதற்றங்கள் எல்லாம் ஊடுருவும் ஊடகம் போல மாறுகிறது.
இன்னும் காஃபி தீர்ந்திடவில்லை. ஆனால் அடுத்த நாளின் தூக்கம் நம்மை பதற வைக்கும்.
இன்னும் தீராத தாகத்தில் காரிருள் இருக்கலாம்!

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...