ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

சமூக விதைகள்

No photo description available.


சமூக விதைகள்

இந்த சமூகத்தின் ஒற்றை வடத்தை எப்படியாவது இழுத்து கட்டிவிட வேண்டும் என்று எத்தனையோ விடயங்களை கடந்தாயிற்று. இதுவும் கடந்து போகும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே மறக்கவும் பழகியாயிற்று. மனதின் ஓரத்தில் ஓயாமல் முற்றுகை இடும் கவலைகளையும் சமாதானப்படுத்தி முடித்தாயிற்று.

ஒன்றை மட்டும் விட்டுவிட்டேன்! நான் அமர்ந்து பேசிப்பேசி பழகிய பெரும்பாண்மை யாவும் சிறுமை கண்டு விலகுவதை கவனிக்க மறந்தேன். சற்று அமர்ந்தேன். சிந்திக்கலானேன். மனம் மாறியது. சாடல் ஒழிந்து தேடல் தொடங்கியது.
கருப்பு வெள்ளை காகிதத்தில் கலர் கனவுகள் போல தவறாமல் வருகிறது மனதின் சஞ்சலங்கள். பிறந்த போது அழுததை விட பிறருக்காக அழுவது வழக்கமாகிவிட்டது
மற்றவர்களைப் போலவே நானும் விரலுக்கு மையிட்டு மையிட்டு காத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் சிறிய திருத்தம். நான் காத்துக் கொள்ளும் அளவிற்கு சமூக அமைப்பு இல்லை என்பதை மட்டும் நினைக்க தவறுகிறேன். பெருமை பேசிய இனம் தானே நாம். சாதிய ஒடுக்குமுறையை கையிலெடுத்த இனம் தானே நாம். பேசுவோமா?
சாலை வழியே ஹிந்தி, கல்வி வழியே ஆங்கிலம், இசை வழியே கன்னடம், கடவுள் வழியே சமஸ்கிருதம் என நம்மை நாமே தொலைத்துவிட்டு திரிகிறோமோ?.
மதமில்லா கடவுள், சாதியில்லா சமூகம் என்பதெல்லாம் வெறும் கனவாகுமோ?. போதும்! நான் மட்டுமே புலம்பி என்ன ஆக போகிறது? பிறகு ஈழம் போல புலம்பெயர்ந்து வாழ்வதற்கு ஆயத்தமாக வேண்டும். கல்தோன்றா மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி, நெஞ்சில் பாரங்களை சுமப்பது விதியின் சதியோ?

🙁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...