ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வெளிச்சமெங்கும் உன் முகம்

Image may contain: 1 person, sitting and outdoor


வெளிச்சமெங்கும் உன் முகம்

ஒரு எஜமானியின் மனப் புத்தகத்திலிருந்த ஒருபக்கம்

வெளிப்படுத்திடவே முடியாமல் இந்த குறுநகையை இத்தனை நாளாய் மறைத்து வைத்திருந்தாயோ!
அதெப்படி, கறைபடிந்த முகத்திற்கு பின்னால் குறையாத இளநகையை தவணையில் செலுத்துகிறாய்!
ஓயாமல் தேயும் பாத்திரங்களில் உன் புன்னகையை இறக்கிவைத்துவிட்டாயா! இல்லை சலவை இயந்திரத்தில் விழுந்த துணிகளைப் போல அதையும் சேர்த்து வெளியேற்றிவிட்டாயா!
நீதானா!
எத்தனை பேர் சத்தம் போட்டாலும் அத்தனை பேருக்கும் பதிலளிக்கும் திறமையை நான் உன்னிடம் கற்றுக் கொள்கிறேன்
ஓய்வின்றி உழைக்கும் நீ ஓய்வூதியம் கேட்காததை எண்ணி உள்ளம் குளிருகிறேன்
மிச்ச மீதியில் கூட இன்பங்களை அனுபவிக்க முடியும் என்று மறுக்காமல் பழகுகிறேன்
இதற்கெல்லாம் காரணம் நீயே!
தூரத்தில் இருக்கும் தாயை நேரில் காட்டும் உனக்கு வருடத்தின் ஒரு நாள்தான் மகிழ்ச்சி என்று தீபாவளி ஆணையிட்டிருந்தால், உன் குறுநகை கண்டு தடைஉத்தரவு பிறப்பிக்கட்டும்
நான் எஜமானி நீ வேலைக்காரி என்பது சமூக சிக்கல்களில் ஒன்றாகளாம். ஆனால் நீ என்றும் என் தாய்க்கு நிகரானவர் தான் (லட்சுமி)
போ! இந்த சேலையால் தீபாவளியின் வெளிச்சமெங்கும் உன் முகம் மிளிரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...