ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வீரியமிக்க வியர்வையில் நான்

வீரியமிக்க வியர்வையில் நான்

உன் மார்போடு சேர்ந்து இடைவெளியுறா இறுக்கத்தில் நான் கதகதப்பை கடத்தும் நிமிடங்களை விட நிம்மதியான நேரம் இப்பிரபஞ்சத்தில் இருக்குமோ!

இவ்விறுக்கத்தில் என்னை நானே மறக்கிறேன். ஏனோ அதை கைவிட மறுக்கிறேன். ஒருவேளை மௌனம் நம்மை தேடுமானால் அதன் பாத ஓசையை உணருகிறேன். உன் ஆடையில் நான் உடலாகிறேன். என் உடலில் நீ உணர்வாகிறாய்.
இந்த வியர்வை வீசும் வீரியமிக்க வாசனையில் இன்னும் எத்தனையோ முறை என்னை இழக்கவும் உருதியாகிறேன். இந்த இறுக்கத்தை தளர்த்திவிட முடியாத யுகங்களை நாம் உருவாக்குவோம் வா!
❤

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...