ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

மகரந்த சேர்க்கையில் நான்


மகரந்த சேர்க்கையில் நான்

நான் எழுதாத கவிதை ஒன்று என்னை எழுதத் தூண்டியது. நான் இதுவரை விவரித்திடா வியாபமது. இத்தனை ஆண்டுகள் ஆகினும், இன்னும் நினைவில் நீண்ட இடங்களை நிரப்பிக்கொண்டே இருக்கிறது.
நானோ பயங்கரவாத காதலன்! எனக்கு காதலில் தீவிரவாதம் பிடிக்கும். சிறுக சிறுக நடக்கும் தாக்குதல்களை உள்வாங்கும் ஹிரோஷிமா போலவே அறியாமல் காத்திருக்கிறேன்.
ஒரேயொரு முத்தம்! தனிமை பூத்த வனத்தில் இனியொரு முழுமை இப்படி பூத்ததில்லை என்பதைப் போன்ற ஈர முத்தம் கிடைத்திட நான் ஏங்குகிறேன்.
எச்சில் ஊறிய இதழில் இச்சை சாயமேற்றி சுவைப்பது எத்தகையதென்பதை என் தமிழுக்கும் தெரியாது.
ஈர உதடுகளில் இப்படி ஒரு கலவரம் மூண்டது இல்லை என்கிற ஏகாந்த ஆசை என்னை தினமும் இசைக்கின்றது.
இசைக்கேற்ற நடனத்தை என் வெற்றிடம் தவறாமல் நிகழ்த்துகிறது. இதோ என் வெற்றிடம் வழிய பாதை காட்டும் பரிபூரண தாகத்தை தணித்திட தாராயோ உன் நீர்க்கோர்வையை!
என் இதய துடிப்பின் இடைவெளியில் எராளமான இசைவுகளை இயற்றிட உனக்கு மட்டுமே தெரியும். இன்னும் தீராத வாசிப்பில் தீர்ந்த பக்கங்களை திருப்பி திருப்பி வாசிக்க பேனா எழுதிக் கொண்டே இருக்கிறது.
முடியாத பக்கங்களை நான் கேட்கிறேன். முடிந்த பத்திகளை பேனா பத்திரப்படுத்துகிறது.
எழுதப்படாத பதிவுகளை நான் யாசிக்கிறேன். ஆனால் அப்பேனாவுக்கு தெரியவில்லை நான் இன்னும் விழித்திரை மூடவில்லை என்று!
- நான் எழுதாத கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...