ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வேலைநிறுத்தம்

The Meaning of Love. On the Philosophy of Fondness | by Joshua ...


கடிகாரம் வேலைநிறுத்தம் செய்கின்றதே!

இந்த காதலைப் பார்த்தாயா! சொல்லிக் கொள்ளாமல் சொல்லிவிடச் சொல்கிறது.
உனக்கும் எனக்கும் ஆகாதது ஈகோ இல்லை. உன் மீது நானும் என் மீது நீயும் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு மட்டும் தான். இன்றும் கூட உன் நினைவுகள் என்னோடு பயணிக்கிறது. நானும் நீயும் மட்டும் வாழும் வாழ்க்கையில்!
நான் சொல்லாத காதலை உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று இன்றும் நினைக்கிறேன். நம் பிரிவை விட நாம் வாழ்ந்த நிமிடங்கள் அவ்வளவு அழகானது. அதை இன்றும் கூட யாசிக்கிறேன்.
♥
உன்னோடு சேர்ந்து உரையாடிய நெடுந்தூர பயணங்கள் முடியாமல் இருக்க இல்லாத கடவுளிடமும் கேட்டிருக்கிறேன்.
நான் பேசுவேனென்று நீ காத்திருந்த நிமிடங்களில் உன்னைப் பேசவைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதேனோ ஆசையின் உச்சம். இச்சைகள் எவ்வளவோ இருந்தும் உன் முதல் எச்சில் முத்தம் இன்னும் என கண்ணத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
இதென்ன மடமை என என்னை நானே திட்டித்தீர்க்கையில், தனிமையில் சிரிக்கையில், படுக்கையறை சுவர்களோடு உரையாடுகையில், மடமையில் தான் காதல் அழகானது என அறிந்தேன்.
♥
எல்லோருக்கும் காதல் வருவதில்லை. எல்லோரும் காதலித்து விடுவதுமில்லை.
காதல் உயிர் இயற்கை என்ற பாரதியின் கருத்தில் முதன்முதலில் முரண்பட்ட நிமிடங்களை என் நாட்குறிப்பில் பதிவிட்டிருக்கிறேன்.
காதலிக்காத கவிஞன் இல்லை. காதலிக்காதவன் கவிஞனே இல்லை. நான் கவிஞன் ஆகிறேன். அக்கவிதையில் நீ தொடர்ந்து கவணிக்கப்படுகிறாய். வாலியின் எழுத்தில் வைரமுத்துவின் வரிகளில் உனக்கொரு காதல் கவிதை நான் எழுதுகிறேன்.
♥
வாழ்க்கை துணை நமக்கும் வரும். ஆனால் அதில் காதல் வருமா என தெரியவில்லை.
உன்னை நினைத்து நினைத்து என் ஆறாம் விரலாய் மாறிப்போன பேனாவில் நீ ஒளிந்து கொண்டு இருக்கிறாயோ!
உன்னைப் பற்றி எழுதுகையில் எழுத்துக்கள் இவ்வளவு அழகாக இருக்கின்றதே! நீ இல்லா நிமிடங்கள் எனக்கு வேண்டாம். இல்லையென்றால் நின்று போகட்டும் என் நிமிடங்கள்!

இந்தியா காதலுக்கான பூமி தான். ஆனால் காதலர்களுக்கானதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...